Monday, December 12, 2022

கோரிக்கைகள்

 பாவலர் புகழ் வாழ்க!வளர்க!

ஆசிரியர் மன்றம் வளர்க! வெல்க!
----------------------------------------
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
(மாநில அமைப்பு)
பதிவெண்:17/74
அரசு அங்கீகார ஆணை எண்:991/89
----------------------------------------
தமிழ்நாடு
தொடக்கக் கல்வி இயக்குனர் சந்திப்பு
----------------------------------------
அன்புடையீர் !வணக்கம்.
தமிழ்நாட்டின்
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு முதல் பருவத்தேர்வு விடுமுறை அனுமதிப்பது சார்ந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் மீது தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் கருத்துகள் , விமர்சனங்கள் மற்றும் ஆசிரியர் கோரிக்கைகள் ஆகியவை தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம் இன்று (28.09.2022) முன் வைக்கப்பட்டுள்ளது.
1.கடந்த 27.09.2022 ஆம் நாளிட்டு வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரின் இணைச் செய்திக்
குறிப்பின் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசின் விடுப்புவிதிகளுக்கு உட்பட்டு , நடைமுறை மரபுகளுக்கு ஏற்ப திருத்திய இணைச் செயல்முறைகள் வெளியிடப்படல் வேண்டும்.
2.தமிழ்நாடு அரசின் ஈடுசெய்விடுப்பு விதிகள் முறையாக தமிழ்நாட்டின்‌ பள்ளிகளில் அமல்படுத்தப்படல் வேண்டும்.
பொத்தாம் பொதுவில் போகிற போக்கில் விடுப்பின் பெயரை மட்டும் கோடிட்டுக்காட்டி விட்டு , ஈடு செய் விடுப்பு விதிகளின் சரத்துகள் சிதைக்கப்படுவது சிறந்த செயலாகாது. எனவே, செய்திக் குறிப்பின் சாதக- பாதக அம்சங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு திருத்திய செயல்முறை வெளியிடல் வேண்டும்‌.
3.எண்ணும் - எழுத்தும் பயிற்சியை வகுப்பு வாரியாக அல்லது 25 சதம் கொண்டு பாடவாரியாக பள்ளி வேலைநாளில் வட்டார வளமையங்களில் நடத்திடல் வேண்டும்.
மேற்கண்டவற்றை கனிவுடன் கேட்டுக் கொண்டுள்ள இயக்குனர் அவர்கள் இரண்டொரு நாளில் திருத்திய செயல்முறை வெளியிடப்படும் என்று தெரிவித்து உள்ளார்கள்.
தங்கள் அன்புள்ள,
முனைவர்-மன்றம் நா.சண்முகநாதன்,
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்.
 20 



1 கருத்த

No comments:

Post a Comment

ஜேக்டோ-ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-புதுக்கோட்டை

 ஜேக்டோ-ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்.