Monday, December 12, 2022

இயக்குனர் சந்திப்பு


 *பாவலர் புகழ் வாழ்க! வளர்க!ஆசிரியர் மன்றம் வளர்க! வெல்க!*

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் (மாநில அமைப்பு)பதிவு எண் 17/74 அரசு அங்கீகார ஆணை எண் 991/89*
*17.10.22 இன்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஆற்றல்மிகு பொதுச் செயலாளர் முனைவர் மன்றம் நா. சண்முகநாதன் அவர்கள் தலைமையில் மாநில அமைப்பின் சார்பில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனர் மதிப்புமிகு முனைவர் ஐயா அறிவொளி அவர்கள், இணை இயக்குனர்கள் மற்றும் தேர்வு துறை இயக்குனர் உள்ளிட்ட அலுவலர் பெருமக்கள் மற்றும் அலுவலக பணியாளர்களைச் சந்தித்து தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், கரூர், விழுப்புரம்,கடலூர், தென்காசி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் ஆசிரியர்களின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள்(தீபாவளி_ 2022 இக்கு அடுத்த நாள் 25.10. 22 அன்று விடுமுறை அளிக்க கோருதல் உட்பட) முன்வைக்கப்பட்டன. மேற்படி கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உறுதி அளித்துள்ளார்கள்.*
*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், மாநில அமைப்பு*

No comments:

Post a Comment

ஜேக்டோ-ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-புதுக்கோட்டை

 ஜேக்டோ-ஜியோ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்-புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்.